கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate) கொடுக்க அப்பள்ளி நிர்வாகம் மறுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு மறுக்கப்பட்டால் அதனை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் தெரியப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் சில ஆவணங்கள் தற்போதைக்கு இல்லை என்றாலும் மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.