மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 இல் நடைபெற்றது. இத்தேர்வு தொடர்பாக விடைத்தாள் நகலை விண்ணப்பித்த தேர்வர்கள், தற்போது மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த சுற்றறிக்கை ஒன்று அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த தேர்வர்கள் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 31/08/2020 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 02/09/2020 (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை விண்ணப்பத்தோடு சேர்த்து ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- மறு மதிப்பீட்டிற்கு பாடம் ஒன்றுக்கு ரூ 505 எனவும்,
- மறுகூட்டல் II பாடம் ஒன்றுக்கு ரூ 205 எனவும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ 305 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.