நீட் (NEET) என்றழைக்கப்படும் தேசிய அளவிலான மருத்துவ படிப்புகளுக்கான பொது தகுதி நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 இல் நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதற்கான ஹால் டிக்கெட் விரைவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை (NTA) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு :
மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 இல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
இத்தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், விண்ணப்பித்துள்ள அனைத்து தேர்வுகளுக்கும் விரைவில் ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் 99.7 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மைய இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தேர்வு தொடங்குவதற்கு முன்பும் தேர்வு நடந்து முடிந்த பின்பும் தேர்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி பட வேண்டும் எனவும், இதற்கான ஏற்பாடுகளை தேர்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப தேர்வர்களுக்கு கவசங்கள், கையுறைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.