மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை மேல்நிலைப் பள்ளிகளில் இன்று (24/08/2020) முதல் துவங்குகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் 24/8/2020 முதல் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கையின் போது பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் அதே பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும், மதிப்பெண் காரணம் காட்டி எக்காரணம் கொண்டும் சேர்க்கை மறுக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இட ஒதிக்கீடு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பொதுப்பிரிவு 81 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 3.5 சதவீதமும்,
  • ஆதிதிராவிடர்கள் 18 சதவீதமும்,
  • பழங்குடியினருக்கு ஒரு சதவீதம்

என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட நடைமுறைகளுக்கும் உட்பட்டு பாதுகாப்பான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும், இதனை பள்ளிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post