கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களும் இணைய வழியிலேயே கல்வி கற்று வந்தனர்.

மேலும், இன்றளவும் கூட பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. இந்த கல்வி ஆண்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. மேலும், பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருந்தாலும், குறுகிய காலத்தில் இந்த பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என பல்வேறு கல்வியாளர்களின் கருத்தாக இருந்தது.

இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போது தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி முழுத்தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதன் அடிப்படையில் இந்த ஆல் பாஸ் நடைமுறைப்படுத்தப்படும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. தற்போது வரை இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 9 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு மட்டுமே சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

9 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு குறித்த உங்களது கருத்து என்ன என்பதைக் கீழே கருத்துரை பகுதியில் தெரிவிக்கவும்.

மேலும், இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.

Previous Post Next Post