அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக சிறப்பாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வரை மேல்நிலை முதலாம் ஆண்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக உள்ளதால், ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும் என்றும், எந்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், எவ்வளவு மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், நீட் (NEET) தேர்வு நடக்கும் நாளில் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து தமிழக முதல்வர் விரைவில் முறைப்படி அறிவிப்பார் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.